Saturday, 14 May 2016

கண்ணாடியும் கவிஞனே! 2

கண்ணாடியும் கவிஞனே!

நீ உன்னை ரசிக்கும் அழகை ரசித்து,
முகம் பார்க்கும் கண்ணாடியும்;
முழுநேரே கவிஞன் ஆனதே!


Friday, 13 May 2016

மைசூர் பாக்கு பற்றி சில வரிகள் 0

அடடா  மைசூர் பாக்கு!

செதுக்கிய செவ்வகமே!
நெய்யில் குளித்த தங்கமே!
உன்னை வாயிலிட்ட பின்னாலே,
கரைந்து விட்டாய் தன்னாலே!

                                         - CJ Ramki


ஏழையின் ஏக்கம்!

பாகும் மாவும் இணைந்து பிறந்தாயே!
நாவிற்கு இனிமையாய் இருந்தாயே!
பணக்காரர்களிமிருந்து பிரிந்தாயே!
நீ ஏழையை பார்க்கும் நாள் எந்நாளோ!

                                       - காரை வேலன்

இப்படிக்கு மனசாட்சி! 1

இப்படிக்கு மனசாட்சி!

தேவையற்ற தனிமையை,
விளக்கமற்ற வெறுமையை
உன்னுள் உணர்கிறாய்!

உனக்கே உனக்காக உன்னுடன்
நான் இருப்பது அறியாமல்!

இப்படிக்கு மனசாட்சி!

#linesOfCJRamki